பஸ் மோதியதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் மரணம்!

நேற்று (01) இரவு அக்கரைப்பற்று பகுதியிலிருந்து
கொழும்பு நோக்கி பயணித்த
(மைக்ரோ) பஸ் ஒன்று காத்தான்குடியை
அண்மித்த தாழங்குடா பகுதியில் இரு
இளைஞர்கள் மீது மோதி
விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில்
இளைஞர்கள் இருவர் பரிதாபமாக
உயிரிழந்துள்ளனர்.

தாழங்குடா பகுதியை சேர்ந்த 20 மற்றும் 24
வயதுடைய இளைஞர்கள் இருவரே இந்த
சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆத்திரமுற்ற
அப்பகுதி பொதுமக்களினால் குறித்த பஸ்
மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது,
இதனால் பஸ் கடுமையான சேதங்களுக்கு
உள்ளாகியுள்ளது.

சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் தப்பி
சென்றுள்ள நிலையில் பொலிசார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post