கடந்த பல மாதங்களாக ஜனாதிபதி ஆணைக்குழு பொலிஸ் பிரிவில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற பொழுது கையடக்க தொலைபேசியை வைத்திருக்க அனுமதி வழங்கப் பட்டிருந்ததமையாலும், ஆணைக்குழு நடவடிக்கைகளை ஊடகவியலாளர்கள் பதிவு செய்து கொண்டிருந்ததாலும் தாம் அதனை பதிவு செய்வதில் தவறில்லை என்ற எண்ணத்திலும் தொடர்ந்தும் தம்மைத் போதிய தயார் படுத்தலுடன் அடுத்தடுத்த அமர்வுகளுக்கு ஆஜராகவுமென அவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என அறிய வருகிறது.
பிரதான சட்டத்தரணியிடமன்றி உதவிக்குச் சென்ற இளம் சட்டத்தரணியிடம் தனது கையடக்க தொலைபேசியை ஒழிவு மறைவின்றி பதிவு செய்யும் நோக்கத்திலேயே ஒப்படைத்ததாககவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
உண்மையில் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையில் கையடக்க தொலைபேசிகளை வைத்திருக்க அனுமதியில்லை என்ற அறிவுறுத்தலை அல்லது ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கட்டுப் பாடுகளை தான் அல்லது குறித்த சட்டத்ததரணி அறிந்திருக்க வில்லை என்று நீதிமன்றில் நியாயம் கற்பிக்க முடியாது என்பதனை அறிவோம்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கை அவர்களுக்கு பாதகமில்லாமல் அறிவுறுத்தல் அல்லது எச்சரிக்கையுடன் நிறைவிற்கு வர பிரார்தித்துக் கொள்வோம்.
இந்த நாட்டின் மீதான தேசப்பற்று, நீதித்துறையை சட்டம் ஒழுங்கை மதித்து நடத்தல் குறித்து அதிகமதிகம் வலியுறுத்தி வழிகாட்டும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மீதோ கண்ணியமிக்க உலமாக்கள் மீதோ மேற்படி துரதிஷ்ட வசமான நிகழ்வு கலங்கம் ஏற்படுத்தி விடக் கூடாது எனவும் எதிர்பார்க்கின்றேன்.
குறிப்பாக வரலாற்றில் மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தை கடந்து செல்லும் நாம் தீய சக்திகள் மற்றும் ஊடக கூலிப்படைகளின் இடையறாத விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் சிவில் சன்மார்க்கத் தலைமைகளை மதித்து பார்வையாளர்களாக அன்றி அவர்களது தன்னார்வத் தொண்டுகளில் பணிகளில் பங்காளர்களாக எம்மையும் இணைத்துக் கொள்ள முன்வர வேண்டும்.
இன்ஷா அல்லாஹ்.
-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்