நான்கு வருடங்களில் நாட்டின் அனைத்து வீதிகளும் கார்பட் செய்யப்படும். -பசில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நான்கு வருடங்களில் நாட்டின் அனைத்து வீதிகளும் கார்பட் செய்யப்படும். -பசில்

நாட்டின் அனைத்து வீதிகளையும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் காபட் செய்து அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

A,B,C,D என வகைப்படுத்தப்பட்டுள்ள நாட்டின் அனைத்து வீதிகளையும் அடுத்த நான்கு வருட காலப்பகுதியில் புனர் நிர்மாணம் செய்தவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

பல மாவட்ட மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு செயற்திறமாக பங்களிக்குமாறு ஜனாதிபதி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்களின் பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் குறித்து விளக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுடன் இணைந்து அரச பொறிமுறையை வினைத்திறனாக பயன்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்வதற்கு மாவட்டக் குழுத் தலைவர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளதென ஜனாதிபதி தெரிவித்தார்.

மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவிக்கு அமைச்சர்கள் அல்லாத இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பது அவர்களது முழு நேரத்தையும் அதற்காக செலவிடுவதற்காகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல மாவட்டங்களுக்கு பொதுவான மற்றும் அந்த மாவட்டங்களுக்கு மட்டுமே குறிப்பான பிரச்சினைகளை அரசாங்கம் கண்டறிந்துள்ளது.

குடிநீர் மற்றும் நீர்ப்பாசனத் தேவைகள் நீர்ப்பாசன புனரமைப்பு, காட்டு யானைகள் கிராமங்களுக்கு வருதல், கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் உள்ள குறைபாடுகளை துரிதமாக நிறைவேற்றுவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

அதனை நிறைவேற்றுவதற்காக அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் நியமனங்களை வழங்கும்போது மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களையும் நியமித்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களினதும் நிலைமையினை மீளாய்வு செய்வதற்கும் பிரச்சினைகளுக்கு அவ்வப்போது தீர்வுகளை வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.