மரம் முறிந்து வீழ்ந்ததில் ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து பாதிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மரம் முறிந்து வீழ்ந்ததில் ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து பாதிப்பு!


வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கரோலினா பகுதியில் (10.09.2020) இன்று அதிகாலை பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் ஹட்டன் – கொழும்பு, மற்றும் ஹட்டன் – கண்டி ஊடான போக்குவரத்து தடைபட்டது.

இதனையடுத்து வட்டவளை பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து வீதியின் குறுக்கே வீழ்ந்த மரத்தினை வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

குறித்த மரம் முறிந்து வீழ்ந்ததால் சுமார் 30 நிமிடத்திற்கும் மேல், போக்குவரத்து தடைபட்டிருந்தது. இதனால் கொழும்பு, ஹட்டன் , கண்டி வைத்தியசாலைக்களுக்கு சென்ற நோயாளர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

அத்தோடு மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக தொலைபேசி கம்பங்கள் மற்றும் மின்சார கம்பங்களும் சேதமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.