ஹம்பாந்தோட்டையில் நான்கு சிறுமிகள் ஆசிரியரால் துஷ்பிரயோகம்!

ஹம்பாந்தோட்டையில் நான்கு சிறுமிகள் ஆசிரியரால் துஷ்பிரயோகம்!


ஹம்பாந்தோட்ட, வலஸ்முல்ல பிரதேசத்தில் மேலதிக வகுப்பிற்கு சென்ற முதலாம் வகுப்பு மாணவிகள் நால்வரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட 36 வயதான ஆசிரியர் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக வகுப்பு சென்ற நிலையில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர், அது தொடர்பில் தமது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பெற்றோர் குறித்த ஆசிரியரை கடுமையாக தாக்கியதுடன், அந்தப் பகுதியில் கட்டி வைத்துள்ளனர்.

சந்தேக நபரான ஆசிரியரின் கையடக்க தொலைபேசியில், துஷ்பிரயோகம் தொடர்பான காணொளிகள் சிலவற்றையும் பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

பெற்றோரினால் கடுமையாக தாக்கப்பட்ட ஆசிரியர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துஷ்பிரயோகத்திற்குள்ளான மாணவிகள் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post