அட்டுளுகம தாக்குதல் சம்பவம்; 5 பேர் விளக்கமறியல்

அட்டுளுகம தாக்குதல் சம்பவம்; 5 பேர் விளக்கமறியல்


பண்டாரகம, அட்டுளுகம பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 15 வயதுடைய சிறுமியை சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பண்டாரகம, அட்டுளுகம, மாராவ பிரதேசத்திற்கு போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் குழுவினர் மீது பிரதேசவாசிகள் நேற்றைய தினம் (09) தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

குறித்த பிரதேசத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரிடம் பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்னர் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பொலிஸ் நிலையம் நோக்கி அழைத்து செல்லும் போது பொலிஸ் ஜீப் வாகனத்தை வழிமறித்த பிரதேசவாசிகள் பொலிஸார் மீது கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் 5 பேரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.   
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post