33 ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டிகளை விடுவித்த குற்றச்சாட்டில் இரு சுங்க அதிகாரிகள் கைது!

33 ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டிகளை விடுவித்த குற்றச்சாட்டில் இரு சுங்க அதிகாரிகள் கைது!


சுமார் 33 ஆயிரம் கிலோ மஞ்சள் கட்டிகளை சுங்க திணைக்களத்தில் இருந்து வெளியேற்றியமை தொடர்பில் சுங்க அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகளும் மற்றும் 3,000 கிலோ உளுந்துடன் 7 லொறிகளும் நேற்று (18) பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தது.


புளுமென்டல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பிரதேசத்தில் வாகன தரிப்பிடம் ஒன்றில் சுமார் 40 அடி நீளம் கொண்ட மூன்று கொள்கலன் பாரவூர்திகளில் குறித்த மஞ்சள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பில் 10 பேர் புளுமென்டல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சட்டவிரோத மஞ்சள் மற்றும் ஏனைய பொருட்கள் டுபாயில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்னால் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.


அத்துடன் மட்டக்குளி பிரதேசத்தின் வர்த்தகர் ஒருவரால் குறித்த பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற நிலையில் அவற்றினை சட்டவிரோதமாக சுங்க திணைக்களத்தில் இருந்து விடுவித்தமை தொடர்பில் குறித்த அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post