பெய்ரூட் வெடிப்பு சம்பவம்; 09 பேர் மாயம்!

பெய்ரூட் வெடிப்பு சம்பவம்; 09 பேர் மாயம்!


பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெடிப்புக்குப் பின்னர் ஒன்பது பேரைக் காணவில்லை என்று லெபனான் இராணுவம் தெரிவித்துளதுறைமுக குண்டுவெடிப்புக்குப் பின்னர் இன்னும் காணாமல் போனவர்களில் இரண்டு சிரிய நாட்டினரும் உள்ளதாக இராணுவம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.


பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய வெடிப்பு நகரத்தை உலுக்கியது.


இந்த அனர்த்தத்தில் 192 பேர் உயிரிழந்ததுடன், 6,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


அதிகாரப்பூர்வ புள்ளி விபரத் தகவல்களின்படி, 15 பில்லியன் டொலர் சேதத்தையும் இந்த வெடிப்பு ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post