மாணவர்களுக்கு இனி பாலுக்கு பகரமாக அரிசி கஞ்சி!

மாணவர்களுக்கு இனி பாலுக்கு பகரமாக அரிசி கஞ்சி!

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் பசும்பாலிற்கு பதிலாக புரதான முறையிலான அரிசி கஞ்சியினை பெற்று கொடுக்க கலந்துரையாடப்பட்டுள்ளது.

போதுமான அளவு பால் உற்பத்தி இல்லாமையினாலும் அனைத்து மாணவர்களின் நன்மையினை கருதியும் இந்த கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே மற்றும் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மந்தப்போசனை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவதனாலும் மாணவர்களுக்கு உரிய வயதில் அவர்களுக்கான போசாக்கு உடலில் சேர்க்கப்படவேண்டும் என்பதாலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post