
நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அக்கட்சியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் பங்கிடப்படும் 196 ஆசனங்களில் ஐ.தே.க. விற்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இத்தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே ஐ.தே.க. பெற்றுள்ளது.
அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மொத்தமான 249,435 வாக்குகளே கிடைக்கப் பெற்றுள்ளன. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.15% வாக்குகளாகும்.
கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படும் தேசிய பட்டியல் ஆசனமாக ஒரு ஆசனத்தை அக்கட்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அது கட்சியின் தலைவர் ரணிலுக்கு கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ரணில் விக்ரமசிங்கவின் 42 வருட அரசியல் வரலாற்றில் முதன் முறையாக, அவர் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.