
நேற்று முன்தினம் மெகசின் சிறைசாலைக்கு அருகில் சிறைச்சாலை புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் பொறுப்பில் எடுக்கப்பட்ட பூனையே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
இந்த பூனை மூலம் எந்த கைதிக்கு ஹெரோயின் அனுப்ப முயற்சிக்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அறையொன்றில் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட பூனை காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.