
தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட SLPP களின் 17 உறுப்பினர் தேசிய பட்டியலில் தில்ஷனின் பெயர் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அவர், தேசிய பட்டியலில் இருந்து விலகுவதற்கான தனது முடிவை அறிவித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பசில் ராஜபக்ஷவிற்கு ஒரு கடிதத்தை அனுப்பியதாக கூறினார்.
"என்னை விட தகுதியான ஒருவருக்கு எனக்காக ஒதுக்கப்படவிருந்த ஆசனம் செல்ல வேண்டும் என நான் உணர்ந்தேன். நான் கிரிக்கெட் விளையாடுவதில் அதிக நேரம் செலவிட்டேன், எனவே இப்போது எனது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிட விரும்புகிறேன். எனவே இந் நேரத்தில் முழுமையான அரசியலில் நுழையாமல் இருப்பதே சிறந்த முடிவு என நான் நினைத்தேன்.” என்றார்.
"ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரச்சாரத்தில் நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய நாட்டை வழிநடத்துகிறார் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று டில்ஷான் மேலும் கூறினார்.