இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் வரி அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் வரி அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு விதிக்கப்படும் வரியை மேலும் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துளளள்ளது.

நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெரிய வெங்காயத்திறகான இறக்குமதி வரியை அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரியை 15 ரூபாவில் இருந்து 50 ரூபா வரை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் அளவு அதிகரித்துள்ளதாலும் உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post