சர்வதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை!!

சர்வதேச ரீதியில் தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை!!

சர்வதேச ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில
நாடுகளுக்கு தொடர்ச்சியாக விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதற்கமைய, இத்தாலியின் மிலானோ, இங்கிலாந்தின் லண்டன், ஜப்பானின் டோக்கியோ, மாலைத்தீவின் மலே, ஜெர்மனியின் பிரான்ங்பர்ட், பிரான்ஸின் பாரிஸ் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களுக்கு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இவ்வாறு குறித்த பகுதிகளுக்கு பயணிக்க விரும்புபவர்கள் காலி, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அலுவலகத்தின் ஊடாக டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 1979 எனும் துரித இலக்கம் அல்லது இணையத்தளம் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post