
புவனேக அலுவிஹாரே, எல்.டீ.பீ தெஹிதெனிய, எஸ். துரைராஜா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் குறித்த மனு இன்று (07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ஆம் திகதி, குறித்த மனு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிபதி பிரியந்த ஜயவர்தன தனிப்பட்ட காரணங்களை முன்னிட்டு அதிலிருந்து விலகியிருந்தார்.
எனவே, இம்மனு மீதான விசாரணையை இன்று வரை ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.