
இந்நிலையில், இரண்டாவது புதிய முனையத்தின் கட்டுமானப்பணிகள் முடிவடைந்ததும், ஆண்டுக்கு மேலும் 9 மில்லியன் பயணிகளைக் கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆண்டுக்கு 15 மில்லியன் பயணிகளை கையாளுவதற்கு இந்த புதிய முனையம் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய முனையத்தின் கட்டுமான திட்டத்தின் முக்கிய பங்குதாரர்களுக்கு (Airport and Aviation Services (Sri Lanka) Limited) திட்டம் குறித்து தெளிவுப்படுத்தும் நிகழ்வு நேற்று (31) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

