ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு அமைச்சு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
அத்துடன் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ச ஆகியோரும் அமைச்சரவையில் இடம் வழங்க்கப்படவில்லை.
$ads={1}
மஹிந்த ஆட்சியிலும் தேசிய அரசாங்கத்திலும் அமைச்சுப் பதவிகளை வகித்த சுசில் பிரேமஜயந்த, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோருக்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை. இராஜாங்க அமைச்சு பதவிகள்கூட அவர்களுக்கு கையளிக்கப்படவில்லை.
$ads={2}
மொட்டு கட்சியில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற் றரஞ்சித் சியம்பலாபிட்டியவும் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
சந்திம வீரக்கொடிக்கு அமைச்சு பதவி கிடைக்காதபோதிலும் அவர் பிரதி சபாநாயகராக நியமிக்கப்படக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.