ஹெரோயின் பொதி செய்யும் நிலையில் கணவன் மற்றும் மனைவி கைது!

ஹெரோயின் பொதி செய்யும் நிலையில் கணவன் மற்றும் மனைவி கைது!

ஹெரோயின் அடங்கிய பாக்கெட்டுகளை பொதி செய்து கொண்டிருந்த நிலையில் இருவர் பிலியந்தலை - சுவரபோல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கணவன் மற்றும் மனைவி என்றும், கைது செய்யப்படும் நிலையில் வீட்டில் ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர். சந்தேக நபரிடம் இருந்த 75 கிராம் ஹெரோயினை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

சந்தேகநபர்கள், 39 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் அவர்களை கெஸ்பேவ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, அண்மை காலமாக நாடு முழுவதிலும் பெருமளவான போதைப்பொருள் கைப்பற்றப்படுவதுடன், பலரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post