
சூரியவௌ பகுதியில் இன்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
"யுத்தத்தினை நிறைவு செய்து நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். ஹம்பாந்தோட்டையில் பாரிய அபிவிருத்தியை முன்னெடுத்தோம். அங்கு சர்வதேச விளையாட்டு மைதானத்தையும் அமைத்தோம். அத்துடன் சூரியவௌ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தாம் அமைத்தோம் என்பதற்காக கடந்த 5 வருடங்களாக அதில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவில்லை."
அத்துடன் அண்மையில் வழங்கப்பட்ட 5,000 ரூபாவை எந்த காரணத்திற்காகவும் மக்களிடம் இருந்து மீளப்பெறப்பட மாட்டாது எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.