களனி பல்கலைகழக மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்!!

களனி பல்கலைகழக மாணவர்களுக்கான விஷேட அறிவித்தல்!!

களனி பல்கலைகழத்தின் நான்காம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் விஞ்ஞானம், வணிகம், முகாமைத்துவம் மற்றும் தொழிநுட்ப பீடங்களின் நான்காம் ஆண்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பீடங்களின் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு மாத்திரம் விடுதி வசதி வழங்கப்படுவதாகவும் எதிர்வரும் 12 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையான காலப்பகுதிக்குள் விடுதிகளுக்கு வருகை தர வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் வீடுகளில் இருந்து வருகை தர முடியுமானவர்கள் விடுதிகளில் தங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post