
பொலிஸ் தலைமையகத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கீழ் ஸ்தாபிக்கப்படும் இந்த விசாரணை பிரிவில் செய்றபடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விரைவில் இதனை ஸ்தாபிப்பதுடன், சட்டவிரோதமான முறையில் வைத்திருக்கும் சொத்துகள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை அரசுடைமையாக்குவது மாத்திரமின்றி, அதனை எவ்வாறான முறையில் அரசுடைமையாக்குவது என்பது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.