குசல் மெண்டிஸ் மது அருந்தவில்லை; பொலிஸார் தெரிவிப்பு!

குசல் மெண்டிஸ் மது அருந்தவில்லை; பொலிஸார் தெரிவிப்பு!

இன்று (05) இடம்பெற்ற வாகன விபத்தை குடிபோதையில் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான குசல் மெண்டிஸ், இவரது முதற்கட்ட விசாரணையில் அவர் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்தவில்லை எமது உறுதியாகியது.

விசாரணைகளில் மேலும் தெரிய வருவதாவது, இலங்கை கிரிக்கெட் சபை ஊழியர் ஒருவரின் திருமணம் ஒன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.தமது நண்பர்கள் அனைவரும் குடி போதையில் இருந்ததால், தான் மட்டும் மது அருந்தாத காரணத்தால் வாகனத்தை செலுத்தியதாக தெரிவித்தார்.

மேலும் தான் விபத்து ஏற்பட்ட சமயம் சோர்வடைந்து உறங்கிவிட்டதாகவும் அதன்காரணமாகவே வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளது என தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து அவர்மீது ஏற்கனவே சந்தேகிக்கப்பட்ட குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றம் விடுவிக்கப்பட்டு விபத்து நடந்ததைத் தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post