மனம் திறந்தார் மங்கல; அரசியல் கட்சியில் இருந்து நீங்கியமைக்கான காரணம்!

Mangala Samaraweera
தனது கருத்துகள் கட்சியில் உள்ள சிலருக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், ஆகையினால் கட்சி அரசியலில் இருந்து வெளியேறியதாகவும் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் உறுப்பினர்களுக்கிடையில் , ஒற்றுமையின்மை, உள் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே நாடாளுமன்ற அரசியலை விரும்பவில்லை. அரசியல் கட்சிக்குள்ள இணைந்துவிட்டால் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவ்வாறு பேசினால் அரசியல் கட்சிக்குள் பின்விளைவுகளை ஏற்பட வாய்ப்புள்ளதாகச் சிலர் தெரிவித்துள்ளனர். 

தனது கருத்துகள் கட்சியில் உள்ள சிலருக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகவும், ஆகையினால் அந்த கட்சியிலிருந்து வெளியேறியுள்ளேன்.

இந்நிலையில், எதிர்வரும் தேர்தலில் அந்த கட்சியில் உள்ளவர்கள் சிறப்பாக வென்று காட்டுவார்கள். வேட்பு மனுக்களை ஒப்படைத்த சில நாட்களில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் மோதல்கள் ஏற்பட்டன. 

இந்நிலையில், தான் அரசியில் ஈட்டுப்பட்டுள்ளமை போதும் என நினைத்ததாக” மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post