இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்கு ஜயந்த தர்மதாச நியமனம்!

இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்கு ஜயந்த தர்மதாச நியமனம்!

இதுவரை SLC உப தலைவர் பதவியில் இருந்த கே.மதிவானன் பதவி விலகியதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவிக்கு ஜயந்த தர்மதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிர்வாகம் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படாததன் காரணமாக பதவியில் இருந்து விலகுவதாகத் தீர்மானித்தாக கே.மதிவானன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட்டின் அரசியலமைப்பிற்கு இணங்க உப தலைவர்கள் இருவருக்கும் சம்பிரதாய பூர்வமாக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட்டில் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் நிகழ்காலத்தில் தமக்கு எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post