இரண்டாக பிளந்த கார் - ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டாக பிளந்த கார் - ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

யக்கல, கிரிந்திவெல வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது இரண்டு மகள்களும் மற்றும் சாரதியும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (23) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பதுளையில் இடம்பெற்ற திருமண விருந்துபசாரம் ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் வந்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காரினை செலுத்தி வந்த நபர் குடிபோதையில் இருந்துள்ள நிலையில், காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதால் மின் கம்பம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயடைந்த இரண்டு மகள்களும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் யக்கல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்து அருகில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.