
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 30, 39, 38 மற்றும் 46 வயதுடைய பிட்டபத்தர, நாரஹேன்பிட்ட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
சந்தேக நபர்களிடம் இருந்து மடிக்கணிணி, வங்கி அட்டைகள், லெமினேட் இயந்திரம், போலி ரபர் ஸ்டேம், போலி சாரதி அனுமதி பத்திரங்கள், அதற்காக பயன்படுத்தும் அட்டைகள் மற்றும் சர்வதேச சாரதி அனுமதி பத்திரங்கள், மோசடிக்கு பயன்படுத்திய கார் மற்றும் வேனையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலபனை பொலிஸார் மேற்கொண்டுள்ள நிலையில் கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

