அரசியலில் குதிக்கும் முரளிதரன் !!!

அரசியலில் குதிக்கும் முரளிதரன் !!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் , கொழும்பில் பொதுஜன முன்னணி வேட்பாளர் விமல் வீரவன்சவின் தேர்தல் வெற்றி குறித்து தமிழ் வர்த்தகர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், இலங்கை சுதந்திர மக்கள் அமைப்பின் தேசிய அமைப்பாளரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்சவின் தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் தமிழ் வா்த்தர்களின் ஒன்றுக்கூடல் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.


அத்துடன், குறித்த வா்த்தர்களை சந்தித்த அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ் வா்த்தர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதில் வழங்கியுள்ளார் அத்தோடு, குறித்த பிரச்சினை களை அரசிடம் முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், அத்தியாவசிய உணவுகளின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர் கள் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், புறக்கோட்டை புடவை கடை வர்த்தக உரிமை யாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பி. தியாகராஜா பிள்ளை, தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தன ராஜா சரவணம், இலங்கை வன்பொருள் வர்த்தக சங்கத்தின் தலைவர், எஸ். அருலானந்தன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post