அனைத்து மின் பாவனையாளர்களுக்குமான விசேட சலுகை!

அனைத்து மின் பாவனையாளர்களுக்குமான விசேட சலுகை!

மின் பாவனையாளர்களின் பெப்ரவரி மாத மின் பட்டியல் கண்டனமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
$ads={1}

கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் நடுப்பகுதி முதல் நாட்டில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளால் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகளிவில் அறவிடப்பட்டதாக மின் பாவனையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டது.


இந்த நிலையில் அதுதொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் மின் பாவனையாளர்கள், பெப்ரவரி மாத மின் பட்டியல் குறிப்பிடப்பட்ட கண்டன அளவையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு செலுத்த முடியும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post