நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை பார்வையிட மீள் அறிவித்தல் வரை தடை

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளை பார்வையிட மீள் அறிவித்தல் வரை தடை

நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிறைக்கைதிகளை பார்வையிட எவரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் அங்குள்ள கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டதுடன், பி.சீஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனையடுத்து வெலிக்கடை சிறைக்கு எவரும் மறு அறிவித்தல் வரை அனுமதிக்கப்படமாட்டர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையிலேயே இன்று நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளுக்குள் கைதிகளை பார்க்க செல்வோர் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post