வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையர்களுக்கான காப்புறுதி இழப்பீடு வழங்கும் திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையர்களுக்கான காப்புறுதி இழப்பீடு வழங்கும் திட்டம்!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்று கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் பணியாளர்களுக்காக அலுவலக காப்புறுதி இழப்பீடு வழங்கப்படும் என்று வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போருக்கு எதிராக 5 இலட்சம் ரூபா அல்லது 6 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும். அத்தோடு இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் மூலம் ஏற்படுத்திக்கொண்டுள்ள 2019 உடன்படிக்கைக்கு அமைவாக அலுவலகத்தில் பதிவை மேற்கொண்டு வெளிநாட்டில் தொழிலில் ஈடுபட்டுள்ளபோது இடம்பெறும் இயற்கை மரணத்திற்காக வழங்கப்படும் இழப்பீடான 5 இலட்சம் ரூபா, கொவிட் 19 நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் பணியாளர்களுக்காக செலுத்தப்படுகின்றது.
$ads={1}
தற்பொழுது இதற்காக 20 பேரின் கடித ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. 2020 மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் பதிவை மேற்கொண்டு வெளிநாடு சென்றவர்களுக்காக இந்த இழப்பீடு 6 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பணியகத்தில் பதிவை மேற்கொள்ளவேண்டிய கால எல்லை கடந்த போதும் அதனை புதுப்பிக்காது பணிபுரிந்து உயிரிழப்போருக்கு காப்புறுதி இழப்பீடு வழங்கப்படமாட்டாது. இவர்களுக்காக பணியகத்தில் விசேட சேமநல நிதியின் கீழ் 3 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும்.

இந்த வருடத்தில் கடந்த 6 மாத காலப்பகுதியில் பணியகத்தில் பதிவை மேற்கொண்டு தொழிலுக்காக வெளிநாடு சென்ற 40,143 பணியாளர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் நிவாரண காப்பறுதியை வழங்குவதற்காக பணியகத்தினால் காப்புறுதி தவணைக் கொடுப்பனவாக ரூபா 2 கோடியே 63 லட்சத்து 33 ஆயிரம் தொகையை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உயிரிழப்போரின் இறுதிச் சடங்கிற்காக 40,000 ரூபா வீதம் வழங்கப்படும். இத்தொகை முன்னர் 30,000 ரூபாவாக இருந்தது. கொவிட் 19 இன் காரணமாக இத்தொகை 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா காரணமாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காக சென்றோரில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 37 பேர் ஆண்களும் 3 பெண்களும் அடங்குகின்றனர். சவூதி அரேபியாவில் 18 பேரும் குவைத்தில் 9 பேரும் ஐக்கிய அரபு எமரேட்டில் 8 பேரும், ஓமானில் இருவரும், லெபனானில் ஒருவருமாக 40 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
$ads={1}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.