ஓகஸ்ட் 5 ஆம் திகதி வாக்களிப்பு நிறைவுற்றதும் வாக்கு எண்ணும் நிலையங்களை சுற்றி ஒரு கிலோ மீற்றர் சுற்றுவட்டாரம் வரை இராணுவப் பாதுகாப்புக்குள் கொண்டுவரப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாக்குப் பதிவு முடிந்ததும் அதே இரவிலேயே வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிப்பது வழமை. ஆனால், இம் முறை ஓகஸ்ட் 6 ஆம் திகதி காலையே வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகும்.