காலாவதியான கிறீஸினால் தயாரிக்கப்பட்ட 50 லட்சம் பெறுமதியான தரமற்ற Hand Sanitizer மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காலாவதியான கிறீஸினால் தயாரிக்கப்பட்ட 50 லட்சம் பெறுமதியான தரமற்ற Hand Sanitizer மீட்பு!

நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு (CAA) மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற புகாரைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை (08) மாலபே - தலஹேன பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தரமற்ற ஹேன்ட் சானிடைஷர்கள் (Hand Sanitizer) கைப்பற்றப்பட்டுள்ளன.

கிறீஸ் மற்றும் எண்ணெயை அகற்ற பயன்படுத்தும் காலாவதியான ஜெல் வகை ஒன்றில் ஆரஞ்சு, ஸ்ட்ராபெரி மற்றும் புதினா ஆகியவற்றின் வண்ணங்கள் மற்றும் நறுமணங்கள் சேர்க்கப்பட்டு இந்த ஹேன்ட் சானிடைஷர் தயாரிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது சந்தைக்கு மீண்டும்  ஹேன்ட் சானிடைஷர்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவை பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தயாரிப்பு துவங்கப்பட்டுள்ளது என CAA இயக்குனர் அசேல பண்டார குறிப்பிட்டார்.

10,000 லீட்டர் எடை கொண்ட சுமார் 50 லட்சம் பெறுமதியான தயாரிப்புகளுடன், சந்தேக நபர்கள் கடுவெல மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இத்தகைய தரமற்ற தயாரிப்புகள் குறித்து நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு 1977 எனும் இலக்கத்தில் தெரிவிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.