கட்டாரிலிருந்து 50 இற்கும் அதிகமானோர் இலங்கை வந்தடைந்தனர்!

கட்டாரிலிருந்து 50 இற்கும் அதிகமானோர் இலங்கை வந்தடைந்தனர்!

வெளிநாட்டிலிருந்து இலங்கையர்கள் உட்பட பயணிகள் 55 பேர் இன்று (27) அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் மூலம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களில் சேவையாற்றிய இலங்கையர்கள் 47 பேரும், இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதுவராலயங்களில் பணியாற்றும் 02 குடும்பங்களைச் சேர்ந்த அதிகாரிகளும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 08 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த இவ்விமானப் பயணிகள் அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post