எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கைக்கு வர இருப்பவர்களுக்கான புதிய நடைமுறை!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு வரும் அனைவருக்கும் 3 PCR பரிசோதனைகள் மேற்கொளள்ப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் தாம் சமூகம் அளிக்கும் நாட்டில் PCR பரிசோதனை மேற்கொண்டமைக்காக அறிக்கையை பெற்றுவர வேண்டும் என தெரிவித்தார்.
Previous Post Next Post