அனைத்து புகையிரத மற்றும் பஸ் பயணிகளுக்கும் Prepaid Travel Card அட்டை!!!

அனைத்து புகையிரத மற்றும் பஸ் பயணிகளுக்கும் Prepaid Travel Card அட்டை!!!

பஸ் உரிமையாளர்களிடம் காணப்படும் வீதி அனுமதிப்பத்திரத்தை உத்தரவாதகமாக பயன்படுத்தி குறைந்த வட்டி வீத கடனொன்றை பெற்றுக் கொடுக்குமாறு பஸ் உரிமையாளர்கள் மேற்கொண்ட கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் வங்கிகளுடன் கலந்துரையாட எதிர்ப்பார்த்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (08) மின்சக்தி மற்றும எரிசக்தி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அமைச்சர்,

எதிர்வரும் காலத்தில் பஸ் கட்டணத்திற்கு பதிலாக முற்கொடுப்பனவு அட்டை ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.


" தற்போது நிலவும கொவிட் 19 காரணமாக பணம் பரிவர்த்தனையின் போது குறித்த வைரஸ் பணம் மூலம் பொதுமக்களிடையே பரவக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. விசேடமாக பயணிகள் பஸ் போக்குவரத்தின் போது அது இடம்பெறக்கூடிய அவதானம் அதிகமாக காணப்படுகிறது.

இதன் காரணமாக பரிந்துரைக்கப்பட்ட குறித்த முற்கொடுப்பனவு அட்டையை உடனடியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post