
இன்று (19) மாலை நடந்த இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
குறித்த பகுதியால் 07 மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை இராணுவம் வழிமறித்துள்ளது. இதன்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மட்டுமே சிக்கியுள்ளனர். ஏனையவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட வாளும் விசேட அதிரடி படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ் இந்து கல்லுரி மற்றும் கல்வியங்காட்டு பகுதியை சேர்ந்தவர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

