கொழும்பில் நடைபெறவிருந்த "I can't breathe" ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிப்பு!!

கொழும்பில் நடைபெறவிருந்த "I can't breathe" ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிப்பு!!

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்னால் நாளை (09) நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு கோட்டை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரியொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தனக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்காத போதிலும்கூட, அவர் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட இருந்தது.

மேலும், அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பவும் இதில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post