ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை அடுத்து மத்திய வங்கியின் அதிரடி தீர்மானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை அடுத்து மத்திய வங்கியின் அதிரடி தீர்மானம்!

இலங்கை மத்திய வங்கியானது பொருளாதாரம் மறுமலர்ச்சி பெறுவதற்கு ஆதரவளிப்பதற்கான புதிய கொடுகடன்‌ திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

நேற்று (17) மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின்‌ பொருளாதார வளர்ச்சியானது கடந்த சில ஆண்டுகளாக மோசமான மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதுடன்‌ உடனடி தீர்வு நடவடிக்கைகள்‌ எடுக்கப்படாவிடின்‌ கொவிட்‌-19 உலகளாவிய தொற்று நோய்த்‌ தாக்கமானது எதிர்வரும்‌ காலங்களில்‌ பொருளாதாரம்‌ மற்றும்‌ நிதியியல்‌ முறைமை உறுதிப்பாடு என்பன மீது தீவிரமான அழுத்தத்தினைத்‌ தோற்றுவிக்கலாம்‌. இப்பின்னணியில்‌, பொருளாதாரத்திற்கு புத்துயிரளிப்பதற்கு அரசாங்கத்தின்‌ முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும்‌ விதத்தில் இலங்கை மத்திய வங்கியின்‌ நாணயச்‌ சபையானது 2020 ஜுன்‌ 16ஆம்‌ திகதியன்று நடைபெற்ற அதன்‌ கூட்டத்தில்‌ 1949 ஆம்‌ ஆண்டின்‌ 58 ஆம்‌ இலக்க நாணய விதிச்‌ சட்டத்தின்‌ 83 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ புதிய கொடுகடன்‌ திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, 2020 மார்ச் 27ஆம்‌ திகதியன்று அறிமுகப்படுத்தப்பட்ட மீள்நிதியிடல்‌ திட்டத்தின்‌ கீழ் ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்ட ரூ.27.5 பில்லியனுக்கு மேலதிகமாக மத்திய வங்கியானது பரந்தளவிலான பிணையுறுதி வாக்குறுதிகளுக்கெதிராக 1.00 சதவீதம்‌ கொண்ட சலுகை வீதத்தில்‌ உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு நிதியளிப்புகளை வழங்கும்‌. இதனூடாக இவ்வசதியின்‌ சாத்தியமான பங்கீட்டினை பரந்தளவில்‌ உறுதி செய்கின்ற நிபந்தனையின்‌ அடிப்படையில்‌ உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்‌ 4.00 சதவீதத்தில்‌ உள்நாட்டு தொழில்களுக்கு கடன்வழங்கும்‌.

இத்திட்டமானது ஏற்கனவே காணப்படுகின்ற மீள் நிதியளித்தல்‌ திட்டத்துடன்‌ இணைந்து கொவிட்‌-19 தொற்று நோயினால்‌ பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு மொத்தமாக ரூ.150 பில்லியனை வழங்கும்‌.

இதற்கு மேலதிகமாக, மத்திய வங்கியினால்‌ நிதியளிக்கபட்ட புதிய பிரத்தியேகமான கொடுகடன்‌ மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட சலுகை வீதங்களில்‌ கிடைக்கப்பெறச்செய்த திட்டத்தின்‌ கீழ்‌ கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்‌ சார்பில்‌ செலுத்தவேண்டிய தொகைக்குச்‌ சமனான அரசாங்கத்தினால்‌ வழங்கப்படும்‌ உத்தரவாதங்களைப்‌ பயன்படுத்தி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளில்‌ இருந்து கட்டுமானத் தொழில் முயற்சிகளுக்கு கடன்பெறுவதற்கான வசதி வழங்கப்படும்‌.

இப்புதிய கொடுகடன்‌ திட்டங்களில்‌ தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்‌ உரிய காலத்தில்‌ உடனடியாக வழங்கப்படவுள்ளன.

நியதி ஒதுக்கு விகிதம் மேலும் குறைப்பு
இலங்கை மத்திய வங்கியின்‌ நாணயச்‌ சபையானது ஜனாதிபதியுடன் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, நேற்று மீண்டும் கூடிய மத்திய வங்கி, நடைபெற்ற அதன் கூட்டத்தில்‌ உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின்‌ அனைத்து ரூபாய்‌ வைப்பு பொறுப்புக்கள்‌ மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தினை 2020 ஜூன் 16 அன்று ஆரம்பிக்கின்ற ஒதுக்குப்‌ பேணுகை காலப்பகுதியில்‌ இருந்து நடைமுறைக்கு வரும்‌ விதத்தில்‌ 2.00 சதவீதத்திற்கு 200 அடிப்படை புள்ளிகளால்‌ குறைப்பதற்கு தீ£மானித்துள்ளது.

நியதி ஒதுக்கு விகிதத்தின்‌ இக்குறைப்பானது உள்நாட்டு பணச்‌சந்தைக்கு ஏறத்தாழ ரூபா 115 பில்லியன்‌ கொண்ட மேலதிக திரவத்தன்மையினை உட்செலுத்தி உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின்‌ நிதியச்‌ செலவுகளைக்‌ குறைக்கின்ற வேளையில்‌ பொருளாதாரத்திற்கு கொடுகடன்‌ பாய்ச்சலினை துரிதப்படுத்துவதற்கு நிதியியல்‌ முறைமையினை இயலச்செய்யும்‌.

இத்தீர்மானத்துடன்‌, மத்திய வங்கியானது கொள்கை வட்டி வீதங்களை மொத்தமாக 150 அடிப்படை புள்ளிகளினால்‌ குறைத்தமை மற்றும்‌ வங்கி வீதத்தினை 550 இடிப்படை புள்ளிகளினால்‌ குறைத்தமை உள்ளடங்கலாக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு ஏனைய இலகுபடுத்தல்‌ வழிமுறைகளுக்கு மேலதிகமாக 2020 ஆண்டின்‌ இதுவரையான காலப்பகுதியில்‌ நியதி ஒதுக்கு விகிதத்தினை மொத்தமாக 300 அடிப்படை புள்ளிகளினால்‌ குறைத்துள்ளது.

நிதித்‌ துறையானது தொழில்களுக்கும்‌ வீட்டலகுகளுக்கும்‌ குறைந்த செலவில்‌ கடன்‌ வழங்குதலை அதிகரிப்பதன்‌ மூலம்‌ உயர்வான திரவத்தன்மை மட்டத்தினதும்‌ குறைக்கப்பட்ட நிதியியல்‌ செலவுகளினதும்‌ நன்மைகளைத்‌ தாமதமின்றி பொருளாதாரத்திற்கு பரிமாற்றுமென எதிர்பார்க்கப்படுகின்றது. நாணயச்‌ சபையானது பொருளாதார மற்றும்‌ நிதியியல்‌ சந்தை அபிவிருத்திகளைத்‌ தொடர்ந்தும்‌ கண்காணிக்கும்‌ என்பதுடன்‌ எதிர்வரவிருக்கும்‌ காலத்தில்‌ பொருளாதார நடவடிக்கையின்‌ நிலைத்திருக்கக்கூடிய மறுமலர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு மேலதிக கொள்கை மற்றும்‌ ஒழுங்குமுறைப்படுத்தல்‌ வழிமுறைகளை எடுக்கும்‌.

நன்றி: தினகரன்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.