ஞானசார தேரரின் வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது!

ஞானசார தேரரின் வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிரான நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் 4 மாவட்டங்களில் போட்டியிடுவதாக அத்துரெலிய ரத்ன தேரர் மற்றும் பொது பல சேனா அமைப்பின்பொதுச் செயலாளர் கலகொட ஞானசார தேரர்களால் முன்வைக்கப்பட்ட வேட்புமனு தாக்கல் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராகநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.


குறித்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஏ.எச்.எம்.கே நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா அகியோர் தலைமையில்இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அத்துரெலிய ரத்ன தேரர் மற்றும் சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட ஞானசார தேரரினால்கொழும்பு,களுத்துறை,குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல்செய்ததாகவும் இவற்றை மாவட்ட அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தாகவும் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post