கொழும்பு தேசிய வைத்தியசாலை கொள்ளையர்களை பிடித்த பொலிஸ் அதிகாரி பலி!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்த அரச புலனாய்வு பிரிவில் சேவையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (14) காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த 11 ஆம் திகதி தும்முல்ல பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி பயணித்த டிபென்டர் வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளார்.
Previous Post Next Post