'த பினான்ஸ்' நிறுவனத்தில் வைப்பிலிட்டவர்களின் பணத்தை விரைவில் திருப்பி செலுத்துமாறு பிரதமர் ஆலோசனை!

'த பினான்ஸ்' நிறுவனத்தில் வைப்பிலிட்டவர்களின் பணத்தை விரைவில் திருப்பி செலுத்துமாறு பிரதமர் ஆலோசனை!

mahinda rajapaksha
இலங்கை மத்திய வங்கியின் கீழ் செயற்படும் நிதி நிறுவனங்களின் வீழ்ச்சியை மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

‘த பினான்ஸ்’ (The Finance) நிறுவனத்தின் தற்போதையை நிலை தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் கீழ் இயங்கும் நிதி நிறுவனங்கள் தொடர்ந்தும் வீழ்ச்சியை சந்தித்தல், அங்கு இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் அரசாங்கம் அதிருப்தி அடைவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக அரச நிதி நிறுவனங்கள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையும் சீர்குலைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் புதிய சட்டங்களை உருவாக்கி, நிதி நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகளை ஒழிக்க செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘த பினான்ஸ்’ நிறுவனத்தில் நிதி வைப்பிலிட்டவர்களுக்கான பணத்தை விரைவில் திருப்பி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் 97 வீதமானவர்களுக்கு நிதியை மீள செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் எச்.ஏ. கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய 03 வீதமானவர்களின் நிதியை பின்னர் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post