கொரோனா வைரஸ்; சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை!!

கொரோனா வைரஸ்; சீனாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை!!

இலங்கையில் உள்ள சீன தூதரகம் முன்பாக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டத்தினை இரத்து செய்யுமாறு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு சீனாவே காரணம் என தெரிவித்து, நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினால் சீன தூதரகம் முன்பாக இன்று (10) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மீறப்படும் என கூறி கறுவாத்தோட்டம் பொலிஸார், நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியதனைத் தொடர்ந்து இவ்வாறு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post