அளுத்கம - தர்கா நகர் முஸ்லிம் இளைஞர் மீதான தாக்குதல் தொடர்பில் நாமல் கண்டனம்!

அளுத்கம - தர்கா நகர் முஸ்லிம் இளைஞர் மீதான தாக்குதல் தொடர்பில் நாமல் கண்டனம்!

அளுத்கம – தர்கா நகரில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸாரும் கலந்துகொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த மே 25ஆம் திகதி மாலை இடம்பெற்றிருக்கும் இந்த சம்பவம் குறித்த CCTV காணொளி ஒன்றை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு கடுமையான காயங்கள் உடலில் ஏற்பட்ட போதிலும் அச்சம் காரணமாக அன்றைய தினம் வைத்தியசாலைக்கு செல்லவில்லை.

பின்னர் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக அலி சாஹிர் மௌலானா கூறியுள்ளார்.

தர்கா நகர் தாரிக் அஹமட் பொலிஸாரால் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்த தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தீவிர விசாரணைகள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post