ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை; அது தொடர்பில் நான் மன்னிப்பு கோரப்போவதும் இல்லை. -முன்னால் ஜனாதிபதி (வீடியோ இணைப்பு)

கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதலின் போது முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நிர்வாகத் தலைவர், தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் காவல்துறை அமைச்சராக பணியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிபிசி சிங்கள சேவை நேர்காணலின் போது ஈஸ்டர் தாக்குதலுக்கு யார் காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியபோது, ​​அது தனக்குத் தெரியாது என்றும், பொறுப்பானவர்களைத் கைது செய்து விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது பாதுகாப்பு பிரிவினரோ அல்லது பிரதமரின் பாதுகாப்பு பிரிவினரோ அறியத்தறவில்லை. இந்நிலையில் தாக்குதல் குறித்து ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எப்படி அறிந்திருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.

Previous Post Next Post