செல்பி எடுக்கச் சென்ற மணப்பெண் மற்றும் மணமகன் நீர்வீழ்ச்சியில் விழுந்தமையால் மணமகன் பலி!

திருமண புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கையில் செல்பி புகைப்படம் எடுப்பதற்காக ரிவஸ்டன் இல் அமைந்திருக்கும் சேர நீர்விழ்ச்சியிலிருந்து நேற்று (28) மாலை மணமகன் விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செல்பி புகைப்படம் எடுக்கும் போது இப்புதிய தம்பதிகள் ரிவஸ்டன் இல் அமைந்திருக்கும் சேர நீர்விழ்ச்சியிலிருந்து குறித்த இருவரும் விழுந்துள்ளதோடு, மணப்பெண்ணின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிரிழந்த 27 வயதுடைய நபர் எஸ். கே. ஷிரந்த சஞ்சய ரத்னசூரிய என்பவர் குருணாகலை பசியகம பிரதேசத்தினைசேர்ந்தவராவார். நேற்று மாலை 04:20 மணியளவிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மணமகனின் உடலை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous Post Next Post