போலீசாரால் மற்றொரு கருப்பினத்தவர் சுட்டு கொலை - அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டங்கள்

அமெரிக்காவில் ஜார்ஜ் ப்ளாய்டு என்ற கருப்பினத்தவர் போலீசாரால் கொல்லப்பட்ட விவகாரத்தால் அந்நாடு முழுவதும் கலவரபூமியாக மாறியுள்ளது. இந்நிலையில், அங்குள்ள அட்லாண்டா மாகாணத்தில் ரேசார்ட் புரூக்ஸ் Rayshard Brooks என்ற மற்றொரு கருப்பினத்தவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.


ஜார்ஜ் ப்ளாய்டு கொல்லப்பட்டதற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பின்னர், காரில் இருந்த ரேசார்ட் புரூக்ஸ் மீது போலீசார் தாக்குதல் நடத்தி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 


இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருவதால் அமெரிக்காவின் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. 

Previous Post Next Post