கிரிக்கெட் விசாரணைப் பிரிவுக்கு முன்னிலையான அரவிந்த டி சில்வா!

aravinda de silva
இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா கிரிக்கெட் தொடர்பில் தவறான விமர்சனங்களை விசாரணைக்கு உட்படுத்தும் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த 2011 ஆம் அண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டி பணத்திற்காக விற்கப்பட்டதாக மகிந்தானந்த அழுத்கமகே வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கே அழைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய இன்று (30) பிற்பகல் 2 மணிக்கு சுகததாச விளையாட்டரங்கில் அமைந்துள்ள குறித்த விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலம் குறித்த காட்டிக்கொடுப்பு தொடர்பில் சந்தேகத்திற்குரிய சில தகவல்களை கடிதம் வாயிலாக சர்வதேச கிரிக்கட் சபைக்கு அனுப்பி வைத்துள்ளதாக மகிந்தானந்த அழுத்கமகே இதற்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post