சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஆர்ப்பாட்டம் செய்யலாம்! -அனில் ஜசிங்க

Sri Lanka health
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றினால் அவர்கள் ஆர்ப்பாட்டங்களை ஈடுபடுவதற்கு தடைவிதிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயக உரிமை என தெரிவித்துள்ள அவர் நோய் தொற்று நிலவுகின்ற வேளையில் இந்த உரிமையை இலங்கை மக்களிற்கு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முக்கவசம் அணிவது, சமூக விலக்கலை பின்பற்றுவது போன்ற சுகாதார வழிமுறைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்பற்றுகின்ற பட்சத்தில் அவர்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பெருமளவு மக்கள் ஒன்றுகூடுவதை நாங்கள் ஊக்குவிக்காத அதேவேளை ஆர்ப்பாட்டத்திற்காக குறிப்பிட்ட அளவிலானவர்களை பயன்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளரின் இந்த கருத்து பொலிஸாரின் கருத்துகளிற்கு எதிரானதாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post