இன்று கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 01, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (27) இரவு 10 மணி முதல் இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post