பள்ளிவாயல்கள் மீளத் திறப்பது சம்பந்தமாக வக்பு சபையின் பணிப்புறைகள்!

பள்ளிவாயல்கள் மீளத் திறப்பது சம்பந்தமாக வக்பு சபையின் பணிப்புறைகள்!

பள்ளிவாயல்களை மீளத் திறப்பது சம்பந்தமான லெங்கை வக்ப் சபையின் பணிப்புரைகள் வணக்கஸ்தலங்கள் தொடர்பான 27.05.2020 திகதியிட்ட சுகாதார அமைச்சின் இறுக்கமான வழிகாட்டல்களின் அடிப்படையில் இலங்கை வக்ப் சபை கீழ் வருமாறுதீர்மானித்துள்ளது.


மேலே கூறப்பட்ட வழிகாட்டல்களின் படி மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள சகல வணக்கஸ்தலங்களும் தொடர்ந்துமுடப்பட்டிருத்தல் வேண்டும். அதற்கேற்ப , மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள சகல பள்ளிவாயல்களும் வக்ப் சபையின் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் முடப்பட்டே இருக்கும். (மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் காலத்துக்குகாலம் சுகாதார அமைச்சினால் தீர்மாணிக்கப்படுவதால் உங்கள் பகுதி MOH அல்லது PHI மூலம் அறிந்து கொள்ளலாம். )

ஏனைய பகுதிகளிலுள்ள அனைத்துப் பள்ளிவாயல்களும் பின்வரும் வரையறைகளுக்குப்பட்டவாறு 15.06.2020 முதல் தனிநபர்தொழுகைக்காக திறக்கப்படும். தர்மகர்த்தாக்கள் அல்லது பொறுப்புதாரிகள் மற்றும் பள்ளிவாயல்களை பாவிக்கும் பொதுமக்கள் பின்வரும் வரையறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு பணிக்கப்படுகின்றனர் :

1. பள்ளிவாயல்களை மீளத் திறப்பதற்கு முன்னர் சகல தர்மகர்த்தாக்களும் அல்லது பொறுப்புதாரிகளும் பள்ளிவாயல்களையும் அதன்வளாகத்தினையும் பொது சுகாதார கண்காணிப்பாளர் ( PHI ) அல்லது சுகாதார வைத்திய அதிகாரியின் ( MOH ) கண்காணிப்பின் கீழ்முழுமையாக சுத்திகரிப்பு ( Sanitisation ) செய்ய வேண்டும்.

2. பள்ளிவாயலினுள் நுளைவது ஒரு வாயிலுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

3. ஒவ்வொரு தொழுகையாளிக்கும் இடையில் தரையில் ஒரு மீட்டர் இடைவெளியை தொழ அனுமதியற்ற பகுதியாக தர்மகர்த்தாக்கள்அல்லது பொறுப்பாளிகள் அடையாளமிடல் வேண்டும்.

4.தர்மகர்த்தாக்கள் அல்லது பொறுப்பாளிகள் பள்ளிவாயலின் நுழைவாயிலில் கைகளை கழுகுவதற்கான வசதிகளை ஏற்பாடு செய்யவேண்டும்.

5. சுபஹ் தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பள்ளிவாயல்கள் திறக்கப்பட்டு தொழுகையைத் தொடர்ந்து 45 நிமிடங்களில் மூடப்படும். மீண்டும் லுஹர் தொழுகைக்கான அதானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்னர் பள்ளிவாயல் திறக்கப்பட்டு இஷாத்தொழுகையினைத் தொடர்ந்து 45 நிமிடங்களில் மூடப்படும்.

6. சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கமைய வழமையான அல்லது விஷேட கூட்டுத்தொழுகைகள் அனுமதிக்கப்பட மாட்டாது . ஆகவே , ஐவேளை இமாம் ஜமாஅத் மற்றும் அல்லது ஜும்மாத் தொழுகை மற்றும் அல்லது ஏனைய கூட்டுத் தொழுகைகள் மற்றும்அல்லது நிகாஹ் மஜ்லிஸ் மற்றும் அல்லது வேறு ஏதேனும் கூட்டு சமய செயற்பாடுகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரைஅனுமதிக்கப்பட மாட்டாது.

7. ஒரு நேரத்தில் 30 பேர் அல்லது அதை விட குறைவானர்கள் மட்டுமே தனி நபர் தொழுகைக்காக பள்ளிவாயிலுள் அனுமதிப்படுவர்.

8. பள்ளியினுள் இருக்கின்ற போது ஒவ்வொருவரும் முகமறைப்பை ( Mask ) அணிந்திருப்பதோடு ஒரு மீட்டர் பௌதிகஇடைவெளியையும் பேண வேண்டும் .

9. வுழுச் செய்யும் பகுதி மற்றும் மலசல கூடங்கள் மறு அறிவித்தல் வரை முடப்பட்டிருக்கும் . ஆகவே பள்ளிவாயலுக்கு வரும் அனைவரும்வுழுச் செய்து கொண்டு வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

10. தரைவிரிப்பு ( Carpet- கார்பட் ) போடப்பட்டுள்ள பள்ளிவாயல்களில் கார்பட்டின் மீது தொழுவது அனுமதிக்கப்படாது . மாறாககார்பட் இல்லாத ஒரு இடத்தில் தொழ வேண்டும்.

11. பள்ளிக்கு வருகின்ற ஒவ்வொருவரும் தன்னுடைய தொழுகைக்காக தொழுகை விரிப்பை ( முஸல்லா ) எடுத்து வருவதோடுபள்ளியிலிருந்து வெளியேறும் போது அதனைத் தன்னோடு எடுத்துச் சென்று விட வேண்டும் . )

12. பள்ளிவாயலை பாவிக்கின்ற ஒவ்வொருவரும் சுகாதார துறை மற்றும் பாதுகாப்பு துறையினால் கொவிட் - 19 தொடர்பாகவழங்கப்படுகின்ற வழிகாட்டல்களையும் பணிப்புரைகளையும் கண்டிப்பாக பின்பற்றியொழுக வேண்டும்.

சுகாதார துறை மற்றும் அல்லது பாதுகாப்புத் துறையினாரால் இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்ற போது இலங்கை வக்ப் சபைமேலதிக பணிப்புரைகளை வழங்கும் .

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
Previous Post Next Post